சுவை – தமிழ்க்கவிதை

என்தலை புதைத்திட

மார்புகளின் மத்தியில்

மஞ்சம் அமைத்தும்,

என்முடி தாங்கிட

தாயின் மடியாய்த்

தன்னை மாற்றியும்,

என் கண்களைக்

கடைந்து உருக்கி அதில்

உறக்கக் கள் ஊற்றியும்,

கனவின் கழிவாய்

உருமாற்றம் கொண்ட என்

துருநாற்ற உமிழ்நீர் தாங்கியும்,

சில பொழுதினில் –

கார நிகழ்வுகள் கீறிக்

கரைந்தோடிய என்

விழிநீர் பருகியும் வாழும்

உனக்கு மட்டுமே

தெரியும் தலையணையே —

என் நினைவுகளின் சுவை…!

– அ. ர. பி.

Advertisements